EA Info

2019.11.06-வினைத்திறனாக செயற்பட்டிருந்தால் கொச்சிக்கடை தேவாலய இழப்புக்களை குறைத்திருக்கலாம்: பிரதிப் பொலிஸ் மா அதிபர்

2019.11.06-வினைத்திறனாக செயற்பட்டிருந்தால் கொச்சிக்கடை தேவாலய இழப்புக்களை குறைத்திருக்கலாம்: பிரதிப் பொலிஸ் மா அதிபர்

 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் உரிய தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தும், அப்­போ­தைய கொழும்பு வடக்கின் பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார  போது­மான உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை என பிரதிப் பொலிஸ் மா அதி­பர் லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க நேற்று  சாட்­சி­ய­ம­ளித்தார். 

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார்  தேவா­லயம் அமைந்­துள்ள கரை­யோர பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு உரிய தகவல் உரிய முறையில் பரி­மாற்­றப்­ப­டாமை ஊடாக தான் இதனை உணர்­வ­தா­கவும், உரிய முறையில் செயற்­பட்­டி­ருந்தால் குறித்த தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலின்  இழப்­புக்­களை குறைத்­தி­ருக்­கலாம் எனவும் அவர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார். 

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­­களை மைய­ப் ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐவர் கொண்ட ஜனா­தி­பதி  விசா­ரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசா­ர­ணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை 3 ஆவது நாளாக நடை ­பெற்ற நிலையில் 2 ஆவது சாட்­சி­யா­ள­ராக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க  தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளித்தார். இதன்­போதே  அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தின் நெறிப்­ப­டுத்­தலில் அவரின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து அவர் இந்த சாட்­சி­யத் தை பதிவு செய்தார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி  ஜனக் டி சில்­வாவின் தலை­மை­யி­லான மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி  நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன,  ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான  நிஹால் சுனில் ரஜ­பக் ஷ,  அத்­த­பத்து லிய­னகே பந்­துல குமார அத்­த­பத்து, ஓய்­வு­பெற்ற அமைச்சு செயலர் டப்­ளியூ.எம்.எம். அதி­காரி அகியோர் முன்­னி­லையில்  நேற்று  2.00 மணி முதல் அவர் இரண்­டா­வது நாளாக சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.

இதன்­போது அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் போது­மான தக­வல்கள் உளவு அறிக்­கை யில் இருந்­தன. அந்த தக­வல்கள் உரிய முறையில் உரிய தரப்­பி­ன­ரி­டையே பரி­மாற்­றப்­ப­ட­வில்லை. இது பாரிய குறை­பா­டாகும். பொலிஸார் உளவுத் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில் அமைத்த பாது­காப்பு போது­மா­ன­தல்ல.  குறிப்­பாக கொழும்பு வடக்­குக்கு அப்­போது பொறுப்­பாக பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார இருந்தார்.

அவர் குறித்த உளவுத் தக­வல்­களை கீழ் நிலை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்கும் போது உரிய போது­மான  நட­வ­டிக்­கை­களைக் கையாண்­ட­தாக தெரி­ய­வில்லை. விசேட­மாக கரை­யோர பொலிஸ்  நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தந்­த­னா­ரந்­த­வுக்கு உளவுத் தக­வல்கள் சரி­யாக பரி­மாற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவரின்  பொறுப்பில் உள்ள பகு­தி­யி­லேயே தாக்­கு­த­லுக்கு உள்­ளான கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலயம் உள்­ளது.

உரிய முறையில் கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சர் செயற்பட்டிருந்தால் இழப்­புக்­களை குறைத்­தி­ருக்­கலாம் என்­பது எனது நிலைப்­பா­டாகும்.  அதே­நேரம்  கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் வரும் கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு பொலிஸ் வல­யங்­களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­களின்  வினைத்­தி­றனும்  போது­மா­ன­தாக இல்லை. குறிப்­பாக ஏப்ரல் 11 ஆம் திகதி அனைத்து பொலிஸ் வல­யங்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்ட சஹ்ரான் தொடர்­பி­லான  உளவுத் தக­வலில் குறிப்­பிட்டு, தங்­கு­மி­டங்கள் வாடகை வீடு­களை சோதனை செய்ய ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அது உரிய முறையில் செய்­யப்­பட்­டதா என்­பதில் சிக்கல் உள்­ளது.

பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டையே தக­வல்­களை பரி­மாற்றிக் கொள்ள முறை­யான கட்­ட­மைப்பு இல்­லாமை மிகப்பெரும் குறை பா­டாகும்.  அத்­துடன் இந்த தாக்குதல் இடம் ­பெறும் வரை இஸ்­லா­மிய  கடும்­போக்­கு­வாதம் தொடர்பில் பொலிஸாருக்கு உரிய  அறிவு  இருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என சாட்சியமளித்தார்.

அதன் பின்னர் விசாரணை முன்னெடுக்கப் பட்ட முறைமை தொடர்பில் அவர் இரகசிய சாட்சியத்தை மாலை 5.45 இன் பின்னர் ஆரம்பித்தார். ஆணைக் குழுவின் அடுத்தகட்ட சாட்சிப்பதிவு நாளை வியா ழக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு இடம் பெறவுள்ளது. 

Source- Virakesari 

 

Leave a Reply