EA Info

2022.04.21- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு

2022.04.21- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு

நாட்டிலுள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

இந்தத் தாக்குதலை திட்டமிட்ட அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றவாளிகளுக்கு எதிராக உரிய வகையில் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்காத பின்புலத்தில் 3 வருடங்கள் கடந்து சென்றுள்ளன.

2019 ஆம் ஆண்டு இன்று போன்றதொரு நாளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 269 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், பலர் அங்கவீனமடைய நேரிட்டது.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை திட்டமிட்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது தொடர்பில் கத்தோலிக்க சபை கடும் அதிருப்தியிலுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Source: News First

 

Leave a Reply