EA Info

2023.09.19- ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: விசாரணைக்கு முட்டுக்கட்டையாகும் தடைகள்

2023.09.19- ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: விசாரணைக்கு முட்டுக்கட்டையாகும் தடைகள்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சதி தொடர்பான அனைத்து விசாரணைகள் தடைபட்ட இடங்கள் பற்றி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்(CID) முன்னாள் தலைவரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரவி செனவிரத்ன வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்று ஒளிபரப்பிய தொலைக்காட்சி பொது நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இவற்றை கூறியுள்ளார்.

முட்டுக்கட்டையாகும் தடைகள் 

முன்னாள் CID தலைவர் ரவி செனவிரத்ன மேற்கொண்ட விசாரணையில் 05 முட்டுக்கட்டை புள்ளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவையாவன,

1. அபூஹிதை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல்

2. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகும் சுரேஷ் சாலேவிடமிருந்து உரிய தகவல்களைப் பெற இயலாமை.

3. சோனிக் சோனிக் எனப்படும் பண்டார விசாரணையை நடத்துவதை மாநில புலனாய்வு முகமை நிறுத்தியமை

4. தொலைபேசியின் IMEI எண்ணுடன் விசாரணை நிறுத்தப்பட்டமை.

5. வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, CID அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன் ராணுவப் புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்துக்குச் சென்றமை

தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்

 

குறித்த நிகழ்ச்சியில் கலந்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் போது கூட, அவர்களால் தற்கொலைத் தாக்குதல்களை ஒரே நேரத்தில் பல இடங்களில் இப்படி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்த முடியவில்லை.

 

 

ஆனால் இவ்வாறானதொரு சூழலை முறியடித்து இஸ்லாமிய தீவிரவாதத் தலைவர் சஹாரான் ஹாசிமைக் கொலைசெய்யும் சக்தி இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என வலியுறுத்தியுள்ளார்.   

Source- IBC Tamil
 

Leave a Reply

Translate »