ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் சூத்திரதாரிகள்! சஜித் கண்டனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையை தாக்குதலில் ஈடுபட்டவர்களே மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித் தலைவரால் கோரப்பட்ட போதிலும்,அந்த கோரிக்கையை புறக்கணித்து, அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் வழங்கப்பட்ட கட்டளைகளையே தற்போதைய அரசாங்கமும் நடைமுறைப்படுத்திக்கொண்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சித் தலைவரான தனக்கு கூட அந்த பகுதிகளை பரிசீலிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.