EA Info

2024.03.31- உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்களில் 6,522 பொலிஸார் கடமையில்

2024.03.31- உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்களில் 6,522 பொலிஸார் கடமையில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்றையதினம் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகளில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 273 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . 

இந்நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களில் இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறுவருவதன் காரணமாக அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸார்  320 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பொலிஸாரின் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

Source- Virakesari

 

 

 

 

 

Leave a Reply